×

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: கச்சத்தீவு யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். இது இந்தியா இலங்கைக்கு இடையில் உள்ளது.  கடந்த 1974ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்து விட்டதாக தற்போது வரை பல்வேறு தரப்பின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில், வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,‘‘கச்சத்தீவு விவகாரத்தில் கடந்த 1974ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் எந்தவித முகாந்திரமும் கிடையாது. குறிப்பாக நமது நாட்டின் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் அது சட்டமாகவும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, கச்சத்தீவை மீட்டெடுத்து இந்தியாவோடு இணைக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது….

The post கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Kachchathivu ,Jaffna Peninsula ,India ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு