×

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வாழ் கனடா நாட்டுக்காரரான விஞ்ஞானி ஜேம்ஸ் பீப்ளஸ், சுவிஸ் நாட்டை சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் மைக்கேல் மேயர், திதியர் க்யூலாஸ் ஆகியோருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அண்டவியல் குறித்த ஆய்வுக்காக ஜேம்ஸ் பீப்ளஸ் பாதி பரிசை பகிர்ந்து கொள்கிறார். இதேபோல் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக மைக்கேல் மேயரும், திதியர் க்யூலாசும் மீதமுள்ள பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.

ஸ்டாக்ஹோமில் டிசம்பர் 10ம் தேதி நடைபெறும் விழாவில், அரசர் கார்ல் நோபல் பரிசுகள் வழங்கப்படும். முன்னதாக, நேற்று முன்தினம் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் கேலீன், கிரெக் செமென்சா, மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த பீட்டர் ரெட்கிளிப் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவை பொறுத்து உடலில் உள்ள செல்கள் எவ்வாறு மாறுகின்றன என்பது குறித்து ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசுகள் இன்றும், இலக்கியத்துக்கான பரிசுகள் நாளையும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளியன்று அமைதிக்கான நோபல் பரிசை நார்வே அறிவிக்கிறது.


Tags : Scientists , Physics, Nobel Prize, 3 scientists
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு