×

1500 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் போலீஸ் எஸ்.ஐ நித்தியானந்தம், ஆனந்தன் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவலர் தேவகுமார் ஆகியோர் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர், லிங்கேசன் தெருவில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர்.  அப்போது ஒரு வீட்டில் இருந்து பெட்டி பெட்டியாக ஆட்டோவில் சரக்கு ஏற்றினர். இதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அங்கு சென்றனர். பண்டலை பிரித்து பார்த்தபோது அதில் குட்கா இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக செல்வம் (30), ஆட்டோ டிரைவர் ராமர் (55) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த குமாரசாமி என்பவர் கொடுங்கையூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, பெங்களூரில் இருந்து ரயில் மூலம் குட்காவை சென்னைக்கு கடத்தி வந்து வடசென்னையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 1500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.Tags : Kutka , Kutka seized, 2 arrested
× RELATED வெற்றிலை ஒரு கட்டு ரூ.1500க்கு விற்பனை...