×

மேகதாதில் அணைகட்ட சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: மேகதாதில் கர்நாடகா அணை கட்டும் முயற்சிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தமிழிசை சவுந்தரராஜனை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தெலங்கானாவில் கவர்னர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது தமிழக மக்களுக்குப் பெருமை சேர்க்கின்ற மிகப்பெரிய பதவியாக கிடைத்திருக்கின்றது. இதற்காக பிரதமர் மோடிக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கீழடியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு ஏற்கனவே துறை அமைச்சர் பலமுறை சென்று வந்திருக்கின்றார், அதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தெலங்கானா கவர்னர் தமிழிசையுடனான மரியாதை நிமித்தமான சந்திப்பு. தெலங்கானா, ஆந்திரா வழியாக தமிழகத்திற்கு நீரை கொடுப்பதற்கு மத்திய அரசின் மூலம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேகதாதுவின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்று ஏற்கனவே நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வழக்கு நிலுவையில் இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், இப்பொழுது இருக்கின்ற அரசுக்கு முன்பு கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த சிவக்குமார் மேகதாது அணை கட்டப்படும் என்று அந்த இடத்திற்குச் சென்று ஒரு அறிக்கையை விடுத்தார்.

பல்வேறு துறையைச் சேர்ந்த 46 நபர்கள் மீது தேச துரோக வழக்கு பதியப் பட்டிருக்கிறது. அது நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அதில் தலையிட இயலாது. டெங்கு பிரச்சனை என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள சிங்கப்பூரிலும் உள்ளது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொது மக்கள் ஏதாவது காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி, பரிசோதனை செய்து முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கவர்னருக்கு விஜயதசமி வாழ்த்து


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு விஜயதசமி வாழ்த்து கடிதம், பூங்கொத்து அனுப்பினார். முதல்வரின் வாழ்த்து கடிதத்தை பெற்றுக்கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் முதல்வருக்கு விஜயதசமி வாழ்த்து தெரிவித்தார்.

Tags : Edappadi Palanisamy ,Ministry of Environment ,Megadat , Ministry of Environment , Megadat ,permission,
× RELATED சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை...