×

தசரா பக்தர் குழுவுடன் கேரளா நடன கலைஞர்கள் கலைநிகழ்ச்சி: நெல்லை வீதிகளில் கலக்கல் நடனம்

நெல்லை: குலசை முத்தாரம்மன் கோயிலில் தசராவிற்காக விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் குழுவினருடன் கேரளாவை சேர்ந்த நடன கலைஞர்கள் நெல்லை வீதிகளில் கலக்கல் நடனமாடினர். பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்  கோயில் தசரா திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் அம்பாள் வெவ்வேறு அலங்காரங்களில் வீதிஉலா நடக்கிறது. இந்த நிலையில் தசரா பண்டிகைக்காக வேடமணிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லை வீதிகளில் உலா வந்து  காணிக்கை பிரிந்துவருகின்றனர். குழுவினராகவும் உலா வருகின்றனர்.

சாத்தான்குளம் தாலுகா அப்புவிளை நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தேவி ஸ்ரீமுத்தாரம்மன் தசரா பக்தர் குழுவினர் நேற்று நெல்லை மாநகரில் முகாமிட்டனர். அவர்களுடன் கேரளாவை சேர்ந்த திரைப்பட நடன கலைஞர்களும் பங்கேற்றனர்.  பக்தி பாடல் மற்றும் திரையிசை பாடல்களுக்கு அவர்கள் நடனமாடி மகிழ்வித்தனர். இவர்களைப் போல் பல்வேறு கலைஞர்கள் நெல்லை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சாலையோர கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.  வேடமணிந்த பக்தர்கள் நாளை குலசை சூரசம்ஹா நிகழ்ச்சிக்கு செல்கின்றனர்.Tags : dancers ,Kerala ,devotee group ,Dasara ,streets ,devotee , Kerala dancers perform with Dasara devotee choral dance
× RELATED புரெவி புயலால் கனமழை கேரளாவுக்கு ரெட் அலர்ட்