×

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்: ரயில் நீர் கொண்டுவரும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

வேலூர்: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்படும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கும் இடையே செய்யப்பட்டிருந்த ஒப்பந்தம் முடிவடிந்ததே இதற்கு காரணமாகும். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. தண்ணீருக்காக பொதுமக்கள் சாலைகளுக்கு வந்தது மட்டுமல்லாமல் சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவந்தனர்.

இதனையடுத்து வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்படும் திட்டம் ஜுலை -2-ம் தேதி தொடங்கப்பட்டது. 159 நாளையுடன் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் தற்போது நிறுத்தப்படுகிறது. சென்னைக்கு தினமும் அங்கிருந்து நாள்தோறும் இரண்டு ரயில்கள் மூலம் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. இதனிடையே மழை காரணமாக கிருஷ்ணா நதி நீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு கட்டுக்குள் வந்துள்ளது.

இதையடுத்து. இதனால் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு வரும் தண்ணீர் நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இதுவரை 40 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Jolarpettai ,Chennai , Drinking water at Jolarpettai, Chennai, train
× RELATED தி.மலை மக்களவை தொகுதிக்குட்பட்ட...