×

நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பையில் இருந்து உரம் தோட்டக்கலைக்கு விற்பனை

நாகர்கோவில்:  நாகர்கோவில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு தயாரிக்கும் உரம் தோட்டக்கலைத்துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் 52வார்டுகளில் தினமும் 110 டன் குப்பைகள் சேரிக்கப்பட்டு வலம்புரிவிளை உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. மலைபோல் தேங்கி கிடக்கும் இந்த குப்பைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. வருகிற 2ம் தேதிக்கு பிறகு மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லகூடாது என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 11 இடங்களில் குப்பைகளை கொண்டு உரமாக்கும் நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 6 செயல்பாட்டுக்கு வந்துள்ளது.  தற்போது அனாதைமடத்தில் அமைந்துள்ள 2 உரமாக்கும் நுண்ணுயிர் உரக்கிடங்கில் குப்பைகளை உரமாக்கும் பணி தொடங்கப்பட்டு வருகிறது. உரமாக்கிய குப்பைகளை முதலில் தோட்டக்கலைத்துறைக்கு 2 டன் மாநகராட்சி வழங்கியது. தற்போது தமிழக அரசு கிராமப்புற வீட்டுக்காய்கறி உற்பத்தி திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் படி தோட்டக்கலைத்துறை 5 வெண்டை விதைகளுடன் உரமும் இலவசமாக வழங்கவுள்ளது. இதற்காக தோட்டக்கலைத்துறை நாகர்கோவில் மாநகராட்சியிடம் உரம் வழங்க கேட்டுள்ளது.

அதன்படி பொருட் காட்சி திடலில் உள்ள 2 உரமாக்கும் நுண்ணுயிர் உரக்கிடங்கில் உற்பத்தியாகும் உரத்தை தோட்டக்கலைத்துறைக்கு வழங்கி வருகிறது. இது குறித்து மாநகர்நல அதிகாரி டாக்டர் கிங்சால் கூறியதாவது: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என பிரித்து வழங்க மக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்கும் குப்பைகளை கொண்டு உரமாக்கும் கூடங்கள் 11 இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 6 கூடங்கள் பணி முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.  அனாதை மடத்தில் உள்ள 2 கூடங்கள் மூலம் இதுவரை 2 டன் குப்பைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் கிராமப்புற வீட்டுக்காய்கறி உற்பத்தி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை உரத்துடன், காய்கறிவிதைகள் வழங்கவுள்ளது. அதற்காக மாநகராட்சியிடம் உரங்கள் வழங்க தோட்டகலைத்துறை கேட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ உரம் ரூ.2க்கு தோட்டக்கலைத்துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : plantation ,Nagercoil Corporation Nagercoil Corporation , Sale ,garbage-to-compos, plantation , Nagercoil Corporation
× RELATED உப்பட்டி சுகாதார நிலையம் அருகே தெருவிளக்குகள் இல்லாததால் பாதிப்பு