×

நவிமும்பை கன்சோலியில் திருமணம் செய்ய இருந்த காதல் ஜோடி தற்கொலை

நவிமும்பை : நவிமும்பையில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளது. நவிமும்பை கன்சோலியில் வசித்தவர் சாக்‌ஷி கோலே. இவரது காதலன் தத்தா வாரே(26). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஆரம்பத்தில் இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

ஆனால் திருமணம் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இருவரும் நேற்று கன்சோலியில் உள்ள வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கு முன்பு கடிதம் எதையும் அவர்கள் எழுதி வைக்கவில்லை. இதனால் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags : Navi Mumbai , Love couple, committing, suicide, Navi Mumbai
× RELATED தற்கொலை செய்ய முயன்றவருக்கு கொரோனா