×

தமிழருக்கு முன்னுரிமை அளிக்க சட்டம் தேவை: பழ.கருப்பையா, முன்னாள் எம்எல்ஏ

கீழடி நாகரிகம் சிறந்த நகர நாகரிகம். சங்க கால பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ள நாகரீகத்திற்கான புறச்சான்றுகள். இதை போய் பாரத தேசம் நாகரிகம் என்கிறார் அமைச்சர் பாண்டியராஜன். தமிழின் பெருமையை அமெரிக்காவில் பேசியதாக தமிழ்நாடு வந்து தம்பட்டம் அடிக்கிறார் பிரதமர் மோடி. கீழடி நாகரிகம் தமிழ் நாகரிகம் என்று சொன்னால் மோடி நிதி தரமாட்டார் என்பதற்காக அதை பாரத தேச நாகரிகம் என்று சொன்னதாக சொல்கிறார் அமைச்சர் பாண்டியராஜன். அப்படியானால் மோடியின் உண்மையான முகம் தான் என்ன? கீழடி நாகரீகத்தை பாரத தேச நாகரிகம் என்று சொல்கிறாரே பாண்டியராஜன், அப்போது பாரத தேசம் இருந்ததா. இனி வள்ளுவனையும் பாரத தேசத்தின் புலவர் என்பார் அமைச்சர்.  சிலர் இருக்கிறார்கள், நன்றாக இருக்கிறீர்களா என்றால் உங்கள் புண்ணியத்தில் நன்றாக இருக்கிறோம் என்பார்கள். ஒருவன் புண்ணியத்தில் இன்னொருவன் எப்படி நன்றாக இருக்க முடியும். அண்டி பிழைப்பதற்கும் ஒரு அளவு வேண்டாமா. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக எதற்கெல்லாமோ பணிந்து போகட்டும்; ஆனால், மக்கள் நலன்களை கூட அடகு வைப்பதா? இது எவ்வளவு பெரிய துரோகம் என்பது எதிர்காலம் அவர்களுக்கு உணர்த்தும். தொடர்ந்து இந்த தவறை ஆளும் அரசு செய்து வருகிறது. மத்தியில் என்ன சொன்னாலும், தலையாட்டுவது என்பது வெட்கி தலைகுனிய வைக்கும் நிலை.

மத்தியில் உள்ளளவர்கள் தொடர்ந்து தமிழை புறக்கணித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. திட்டமிட்டு தான் அவர்கள் இந்தியை எந்த வழியாக இருந்தாலும் திணிக்க முயற்சிக்கின்றனர். மோடி நிதி தராவிட்டால் தமிழ் நாகரிகம் இல்லாமல் போய் விடுமா. பொறியியல் கல்லூரியில் பகவத் கீதையை கற்பித்தால் என்ன தவறு என்று கேட்கிறார் அமைச்சர் பாண்டியராஜன். அவர், ஒரிஜினல் அக்மார்க் பாரதீய ஜனதா கட்சிக்காரர். எப்படி நிதிக்காக ஒரு பேச்சு பேசினாரோ, அப்படி பதவிக்காக பாஜவில் இருந்து தேமுதிக வழியாக அதிமுகவுக்கு வந்து அமைச்சரானவர். எந்த ஒன்றிலும் பயன்கருதி செயல்படுபவர் அமைச்சர் பாண்டியராஜன். கடமையை செய் பயனை எதிர்பார்க்காதே என்கிற கீதையை இவர் பரிந்துரைக்கிறார். இவருக்கு கீதை என்பது தத்துவ நூல் இல்லை. மோடியை வளைப்பதற்கு பயன்படுகிற கருவி. ஒரு கொள்கையும் இல்லாத பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித்துறைக்கு அமைச்சராகி இருப்பதை பார்க்கும் போது எப்படி தமிழ் வளரும். அவர் வேறு துறைக்கு அமைச்சராகி இருக்கலாம். அவர் தமிழ் வளர்ச்சித்துறைக்கு அமைச்சராகி இருப்பது தமிழுக்கு ஆக்கமானது இல்லை. தமிழின் பெருமையை குறைக்கிறது. 4 ஆயிரம் ஆண்டு நாகரிகம் பாண்டியராஜன், மோடி தயவில்லாமலேயே வளர்ந்து இருக்கிறது.

ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாநில இளைஞர்களுக்கு தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் இயற்றியுள்ளனர். அதே போன்று தமிழகத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும். அவரவர் மாநிலத்தில் அவரவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும், அந்தெந்த மாநிலத்தில் உள்ளவர்கள் வேலை செய்தால் தான் ெமாழி பிரச்னை வராது. மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழகத்தில் வேலை செய்யும் போது சில நேரங்களில் இங்குள்ளவர்களுடன் மொழி கலந்துரையாடலால் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. ரயில்வே துறையில் தமிழில் தேர்வு இருக்கிறது என்று கூறியுள்ளனர். அதே போன்று டிஎன்பிஎஸ்சியில் முன்பை விட தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று அதன் நிர்வாகம் கூறியுள்ளது. எனவே, தேர்வு நடைபெறும் போது தான் நிறை, குறை என்ன என்பது தெரியும்.ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாநில  இளைஞர்களுக்கு தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம்  இயற்றியுள்ளனர். அதே போன்று தமிழகத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும். அவரவர்  மாநிலத்தில் அவரவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

Tags : MLA ,Tamils ,Fr , Priority ,Tamils, Fr.
× RELATED மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு...