×

அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க தடுப்பு வேலி

ராமேஸ்வரம் : தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்கும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது.தனுஷ்கோடி செல்லும் சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனை கடற்கரைக்கு செல்கின்றனர். அங்கு பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் சந்திக்கும் இடத்தில் கடலில் இறங்கி கால்களை நனைத்து விளையாடுகின்றனர். இந்த இடத்தில் கடலடியில் மணலரிப்பு இருக்கும் என்பதால் கடலில் இறங்குபவர்களை கடலில் மூழ்கி பலியாகின்றனர்.

குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் என பலருடம் கடலில் மூழ்கி பலியாகியுள்ள நிலையில், போலீசாரின் எச்சரிக்கையை மீறி இன்று வரை சுற்றுலா பயணிகள் ஆபத்தான இந்த இடத்தில் கடலில் இறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மரைன் போலீசாரால் அரிச்சல்முனை கடற்கரை கடலோர பகுதியில் மரம் மற்றும் கயிற்றால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. கயிற்றினால் அமைக்கப்பட்ட இத்தடுப்பு வேலியை தாண்டி சுற்றுலா பயணிகள் கடலோரத்திற்கு செல்வதோ, கடலில் இறங்குவதோ கூடாது போலீசாரால் எச்சரிக்கையும் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் மரைன் போலீசார் தடுப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


Tags : beach ,Arihalmunai ,sea ,Rameshwaram ,ArisalMunai Seashore Tourist , rameshwaram,ArisalMunai ,Seashore ,Tourist
× RELATED குமரி கடற்கரையில் பாம்பு குவியலா?