×

கொளத்தூர் தொகுதியில் மாநகராட்சி குளம் தூர்வாரும் பணி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட யமுனா நகர்  திருவீதி அம்மன் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான குளத்தை தூர்வாரும் பணியை தொகுதி எம்எல்ஏவும், திமுக  தலைவருமான  மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பயன்பாடற்ற நிலையில் கிடந்த ஹரிதாஸ் குளத்தை சீரமைத்து   மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

குளத்தின் உள் பகுதியில் மின் விளக்குகளை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று  நேற்று மின்விளக்குகள் அமைத்து அதனை  மக்கள் பயன்பாட்டிற்காக ஸ்டாலின் வழங்கினார். மேலும், குளத்தை சுற்றி புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி செய்ய தேவையான உபகரணங்கள் மற்றும் புதிய கழிவறைகள் அனைத்தையும் பார்வையிட்டார். அப்போது, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ப.ரங்கநாதன் மற்றும் சேகர்பாபு உடனிருந்தனர்.

Tags : MK Stalin ,constituency ,pool ,Kolathur , MK Stalin inaugurated,e municipal pool,Kolathur constituency
× RELATED கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின்...