டிக்டாக் நடிகைக்கு பாஜவில் சீட்; அரியானாவில் ருசிகரம்

சண்டிகர்: அரியானாவில் பா.ஜ கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக் டாக் நடிகைக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அரியானாவை சேர்ந்தவர் சோனாலி பொகத். சினிமா மற்றும் சில டிவி சீரியல்களில் நடித்துள்ளார். இந்திப் பாடல்கள்  மட்டுமல்லாமல் பல மொழிப் பாடல்களுக்கும் இவர் டிக்டாக் செய்துள்ளார்.  கவர்ச்சியும் இடையிடையே  விளையாடுகிறது. இவரை டிக்டாக்கில் ஏகப்பட்ட ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

இவர்கள்தான் சோனாலியை தேர்தலில் நிற்குமாறு உசுப்பி விட்டனர். பிரபலங்களை உடனே பயன்படுத்திக்கொள்ளும் யுக்தியை கையிலெடுத்துள்ள பாஜ உடனடியாக சோனாலிக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் ஒதுக்கி உள்ளது. பாஜக சார்பில் ஹரியானாவில் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளார் சோனாலி. வரும் 21ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ள சோனாலி, இப்போதும் டிக் டாக் செய்வதை நிறுத்தவில்லை.

Related Stories:

>