சீனா ஆதிக்கத்தால் வந்த ஆன்லைன் போட்டியால் சரிந்து வரும் டிவி விலை

புதுடெல்லி: பண்டிகை சீசன் நெருங்கியுள்ள நிலையில், ஆன்லைன் நிறுவனங்கள் அதிரடி தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக சில டிவி, மொபைல்கள் ஆன்லைனில் மட்டுமே அறிமுகம் செய்யப்படுகின்றன. சீன நிறுவனங்கள் பல ஆன்லைன் விற்பனை உத்தியை மட்டுமே நம்பியுள்ளன. இவ்வாறு விற்கப்படும் டிவிக்களில், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் முக்கிய அம்சங்கள் மட்டுமே இருக்கும். இதனால் சந்தையில் ஏற்கெனவே பல ஆண்டுகளாக உள்ள பிரபல நிறுவனங்களின் தயாரிப்பை விட விலை மலிவாக கிடைக்கிறது. சீன நிறுவனங்கள் உதிரி பாகங்களை கொண்டு வந்து இங்கு அசெம்ப்ளிங் செய்வதாலும் விலை மிக மலிவாக இருக்கிறது.

உதாரணமாக, சில பிராண்ட்களின் 24 அங்குல டிவியை 5,500க்கு கூட வாங்கலாம். 40 அங்குல டிவி 15,000க்கு கிடைக்கும். இதனால், ஷோரூம்கள் மூலம் விற்கப்படும் பிரபல பிராண்ட் டிவிக்களும் விலையை குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டிவி உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாவது: ஆன்லைன் போட்டியால் சந்தையில் புதிய மாடல்களை அறிமுகம் செய்து ஓராண்டு கூட நிலைத்து நிற்க முடிவதில்லை. இப்படி 50 சதவீத பிராண்டுகள் ஏறக்குறைய சந்தை போட்டியில் இருந்தே விலகும் அளவுக்கு பரிதாபமாக உள்ளன. இதனால் நஷ்டம் இருந்தாலும் அவற்றின் விலையை குறைத்து விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

Related Stories:

>