×

காந்தியின் 150வது பிறந்தநாள் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி சென்னை காமராஜர் சாலை, மெரினா பூங்காவில் உள்ள காந்தியின் உருவச் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி, தென் சென்னை மாவட்ட செயலாளர் ஏழுமலை உள்ளிட்டோர் சென்னை காமராஜர் சாலையில், மெரினா கடற்கரையில் உள்ள  காந்தியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சாதி வெறி, மத வெறி அகற்றிடவும், சமூக நல்லிணக்கம் பேணவும் உறுதி ஏற்கப்பட்டது. தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட கிராமங்களில் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து, தீண்டாமை ஒழிப்பு மற்றும் வேலை பெறும் உரிமை பாதுகாப்புப் போராட்டத்தை முன்னெடுக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.


Tags : Gandhi ,Birthday Communist Party , Gandhi's Birthday, Communist Party
× RELATED சதியா வேலையா? போலீஸ் விசாரணை காந்தி மார்க்கெட்டில் மீண்டும் ‘தீ’ விபத்து