×

17 வயதிலேயே பாலியல் உறவு: நடிகை கங்கனா ரனாவத் பகீர் பேட்டி

மும்பை: 17  வயதிலேயே பாலியல் உறவு வைத்துக்கொண்டேன் என்றார் நடிகை கங்கனா ரனாவத். அவருக்கு மகளிர் அமைப்பினர் கண்டனம்  தெரிவித்துள்ளனர். தமிழில் தாம் தூம் படத்தில் நடித்தவர் நடிகை கங்கனா  ரனாவத். இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: பெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பான பாலியல் உறவுக்கு அனுமதிக்க வேண்டும்.  அதேசமயம் அவர்கள் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்துவதுடன், ஒருவருடன்  மட்டுமே உறவு கொள்பவராக இருக்க  வேண்டும். ஆட்களை மாற்றுவது சரியாக  இருக்காது. குழந்தைகள் பருவ வயதை அடையும்போது பாலியல் பற்றிய விவரத்தை  தன்னால் தெரிந்துகொள்வார்கள். நான் 16 அல்லது 17 வயதாக இருக்கும்போதே  பாலியல் உறவில் ஈடுபட்டதை எனது பெற்றோர் அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.  அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எனது அம்மா 19 வயதாக  இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டார். என் அப்பாவுக்கு அப்போது 21  வயது.

ஒவ்வொருவரது  வாழ்விலும் பாலியல் உறவு என்பது மிகவும் முக்கியத்துவமானது. நீங்கள் உறவு  கொள்ள வேண்டுமா, உறவு கொள்ளுங்கள். ஆவேசப்படாதீர்கள்.  இன்றைய  இளைய தலைமுறையினர் 30 வயதுக்கு பிறகுதான் திருமணம் செய்கிறார்கள்.  அப்படியானால் 20 வயதில் அவர்களின் உணர்ச்சிகளை எப்படி அடக்கி வைப்பார்கள்.  அந்த காலகட்டங்கள் அவர்களுக்கு கடினமான தருணமாகிவிடுகிறது. ஆனால் அந்த  வயதில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவும் தயாராக இருப்பதில்லை. பிரம்மச்சாரிகள்  தங்களது உணர்ச்சிகளை தீர்த்துக்கொள்ள பல்வேறுமுறைகளை கையாள்கிறார்கள்.  ஆனால், அந்த டெக்னிக் தெரியாமல் பலர் மனஅழுத்தத்தில் சிக்குகிறார்கள்.  அப்படிப்பட்டவர்களை வெறி பிடித்தவர்களாக்குகிறது. எனவே கொஞ்சம் மேற்கத்திய  பாணியை மேற்கொள்வது தவறல்ல என்றார். அவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Tags : Kangana Ranaut Bhagir , 17 Age, sex, actress Kangana Ranavat
× RELATED அரசியல் தலைவர்களின் பெயர்...