×

ஜோலார்பேட்டையிலிருந்து குடிநீர் எடுத்துவர 12.54 கோடி கட்டணம்

சென்னை : சென்னையில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனை சரி செய்ய ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி  ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் திட்டத்திற்கு ரூ.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தினமும் ஒரு நடைக்கு 50 வேகன்கள் கொண்ட ரயில் மூலம் 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னை வில்லிவாக்கத்தில் பெறப்பட்டு சென்னைக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது ரயில் மூலம் மேலும்  2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அதன்படி தினசரி  5 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு சென்னைக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இப்படி கடந்த ஜூலை 12ம் ேததி முதல் சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. இதுவரை 141 நடை மூலம் 352 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னை குடிநீருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே  தெரிவித்துள்ளது. இதற்கு கட்டணமாக தமிழக அரசு ரூ.12.54 கோடியை செலுத்தியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Jolarpettai Jolarpettai , Rs 12.54 crore,drinking water, Jolarpettai
× RELATED இன்று காலை 11 மணி முதல் 3 வரை...