×

‘ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்’ விவகாரம் பிரதமருக்கு ராஜதந்திரத்தை கற்றுக் கொடுங்கள் ஜெய்சங்கர்: டிவிட்டரில் ராகுல் கிண்டல்

புதுடெல்லி: அமெரிக்காவில் ‘ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்’ என அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி பிரசாரம் செய்தது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். இதை பற்றி டிவிட்டரில் கருத்து தெரிவித்த ராகுல்,  ‘ராஜதந்திரம் என்றால் என்னவென்று பிரதமருக்கு கொஞ்சம் கற்றுக் கொடுங்கள்’ என கிண்டலடித்துள்ளார்.அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, ‘ஹவுடி மோடி’ என்ற பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். அதில், அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்றார். அப்போது பேசிய மோடி,  ‘ஆப் கி பார் டிரம்ப்  சர்க்கார்’ என முழக்கமிட்டார். ‘மீண்டும் டிரம்ப் ஆட்சி’ என்பதே இதற்கு அர்த்தம். டிரம்ப்புக்காக பிரதமர் மோடி அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் செய்ததாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், வாஷிங்டனில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார். அவர் கூறுகையில், ‘‘பிரதமரின் பேச்சை உற்று கவனியுங்கள். ‘ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்’ என்ற வாசகத்தை அதிபர்  டிரம்ப், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் 2020ம் ஆண்டுக்கான தனது தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதையே பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஒரு வேட்பாளராக இந்தியாவையும், அமெரிக்க வாழ் இந்தியர்களையும் இணைக்கும்படி  டிரம்ப்பை  வலியுறுத்தினார். அவர் நேர்மறையாக கூறிய விஷயம், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் தலையிடக் கூடாது என்ற கொள்கையை இந்தியா கொண்டுள்ளது,’’ என்றார்.

இதை் தொடர்ந்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஜெய்சங்கரின்  விளக்கத்தை பாராட்டியும், பிரதமர் மோடியை கிண்டலடித்தும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவு வெளியிட்டார்.அதில், ‘எங்கள் பிரதமரின் திறமையின்மையை மூடி மறைத்ததற்காக ஜெய்சங்கருக்கு நன்றி. பிரதமரின் முகஸ்துதி ஒப்புதலால், இந்தியாவிற்கான ஜனநாயகவாதிகளுக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் உங்கள் தலையீட்டால்,  அது நீங்கிவிட்டதாகவே நம்புகிறேன். நீங்கள் எல்லாம் இருக்கும் போது, ராஜதந்திரம் பற்றி பிரதமருக்கும் கொஞ்சம் கற்றுக் கொடுங்கள்...’ என கூறியுள்ளார்.பிரதமரின் முகஸ்துதி ஒப்புதலால், இந்தியாவிற்கான ஜனநாயகவாதிகளுக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் உங்கள் தலையிடால், அது நீக்கிவிட்டதாகவே நம்புகிறேன்.

Tags : Teach Jaishankar ,Rahul Kindle , Time , Ki Trump, Sarkar issue, Prime Minister,Rahul
× RELATED அரசு தயார்நிலை: ராகுல் கிண்டல்