×

24 மணி நேரத்தில் 18 மணி நேரம் நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உழைத்து வருகிறார்: மேற்கு வங்கத்தில் அமித்ஷா பேச்சு ‎

கொல்கத்தா: மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதன்முறையாக மேற்கு வங்க மாநிலத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா; ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை பா.ஜ.,வின் முதல் தலைவர் எஸ்பி முகர்ஜி வலியுறுத்தினார். அவர் மே.வங்க மாநிலத்திற்காக கடுமையாக உழைத்தார். அவரின் கனவை மோடி நினைவாக்கினார். எத்தனை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்த்தாலும், மேற்குவங்கத்தில் , தேசிய குடிமக்கள் பதிவேட்டை(NRC) பாஜக அரசு கொண்டுவந்தே தீரும் என கூறினார். இந்து, சீக்கியம், ஜெயின், புத்தம், கிறிஸ்தவத்தைச் சேர்ந்த சட்ட விரோத குடியேறிகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று உறுதியளிக்கிறேன்.

நீங்கள் மத்திய அரசால் வெளியேற்றப்படமாட்டார்கள். வதந்திகளை நம்பாதீர்கள். என்.ஆர்.சியை அமல்படுத்துவதற்கு முன், குடிமக்கள் சட்டத்தை நாங்கள் கொண்டுவருவோம். அந்தச் சட்டம் நீங்கள் (முஸ்லிம் அல்லாதவர்கள்) குடியுரிமை பெறுவதை உறுதி செய்யும்’ என்று தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலைமையை இந்தியா மட்டும் அல்ல. உலக நாடுகள் ஏற்று கொண்டன. 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் நாட்டு மக்களுக்காக மோடி உழைத்து வருகிறார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Tags : Amit Shah ,nation ,Modi ,speech ,West Bengal ,India , Natives, Prime Minister Modi, West Bengal, Amit Shah
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...