×

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு: முன்னேற்பாடுகள் குறித்து நாளை ஆய்வு செய்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து நாளை முதல்வர் பழனிசாமி பார்வையிடுகிறார். பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் வருகிற 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை முகாமிடும் இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தலைவர்கள் இருவரும் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், பட்டர்பால், ஐந்துரதம் பகுதிகளை பார்வையிடுகிறார்கள். இந்நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள புராதன மையங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார் சாலைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு வசதிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.  மத்திய தொல்லியல் துறையும் பாரம்பரிய சின்ன மையங்களில் அழகிய புல்வெளிகளை அமைத்துள்ளன.

சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு வசதிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மத்திய தொல்லியல் துறையும் பாரம்பரிய சின்ன மையங்களில் அழகிய புல்வெளிகளை அமைத்துள்ளன. பாதுகாப்பு முன்னேற்பாடு, ஆயத்த பணிகள் குறித்தும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் 2-ம் கட்டமாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சுற்றி பார்த்து ஆய்வு செய்தனர். சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு வசதிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மத்திய தொல்லியல் துறையும் பாரம்பரிய சின்ன மையங்களில் அழகிய புல்வெளிகளை அமைத்துள்ளன.

பாதுகாப்பு முன்னேற்பாடு, ஆயத்த பணிகள் குறித்தும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் 2-ம் கட்டமாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சுற்றி பார்த்து ஆய்வு செய்தனர். மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய்கோகலே மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், உள்ளிட்ட10 பேர் கொண்ட குழுவினரும் மாமல்லபுரம் வந்துள்ளனர். கடற்கரை கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் உத்தரவிட்டனர்.

இதே போல் வருகிற 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மீனவர்கள் அனைவரும் கடலுக்கு செல்லக்கூடாது எனவும், கடலோர பாதுகாப்பு படையினர் தடை விதித்துள்ளனர். இதனால், காவல்துறையின் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் மாமல்லபுரம் வந்துள்ளது. இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மாமல்லபுரம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து நாளை முதல்வர் பழனிசாமி பார்வையிடுகிறார்.


Tags : President ,Mamallapuram ,Chinese , Mamallapuram, Prime Minister Modi - Chinese President, Study, Chief Minister Palanisamy
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...