×

மகாராஷ்டிரா தேர்தல் உத்தவ் மகன் ஆதித்யா ஒர்லி தொகுதியில் போட்டி: சிவசேனா அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மூத்த மகனும் கட்சியின் இளைஞரணி தலைவருமான ஆதித்யா ஒர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல்  நடக்க உள்ளது. இத்தேர்தலில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன்  ஒர்லி தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. சுனில் ஷிண்டே, தனது இடத்தை ஆதித்யா தாக்கரேக்கு விட்டுக் கொடுத்துள்ளார். சிவசேனாவுக்கு மிகவும் பாதுகாப்பான தொகுதியாக ஒர்லி இருக்கிறது. எனவேதான் அந்த தொகுதிக்கு ஆதித்யா தாக்கரேயின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சச்சின் அஹிர் சமீபத்தில் சிவசேனாவில் சேர்ந்ததால் ஆதித்யா தாக்கரேயின் வெற்றி இன்னும் எளிதாகி இருக்கிறது” என்றார்.

கடந்த 2014ம் நடந்த தேர்தலில் ஒர்லி தொகுதியில் போட்டியிட்ட சச்சின் அஹிர் சிவசேனா வேட்பாளர் சுனில் ஷிண்டேயிடம் தோற்றுப்போனார். சிவசேனா கட்சி கடந்த 1966ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. அதேபோல எந்தவொரு அரமைப்பு சார்ந்த பதவியையும் அவர்கள் வகித்ததில்லை. ஆதித்யா தாக்கரே வெற்றி பெறும் பட்சத்தில் அந்த குடும்பத்தில் இருந்து மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படும் முதலாவது நபராக ஆதித்யா தாக்கரே இருப்பார்.


Tags : Maharashtra ,Shiv Sena ,Uttav , Maharashtra Election, Uthav Son, Aditya, Orly Vol, Shiv Sena
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...