×

புகாரை வாங்க போலீசார் மறுப்பு கவர்னர் மாளிகை முன்பு தீக்குளிக்க முயன்ற கால்டாக்சி டிரைவர் கைது

ஆலந்தூர்: புகாரை வாங்க மறுத்த போலீசாரை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு தீக்குளிக்க முயன்ற கால்டாக்சி டிரைவரை போலீசார் கைது  செய்தனர்.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்  முகமது சாகிப் (30). இவர், கிண்டியில் உள்ள  தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் கமிஷன் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் முதல் கார் ஓட்டி வந்தார். சில தினங்களுக்கு முன்பு முகமது சாகிப், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பிக்அப் ஒன்றை கேன்சல் செய்ததால்   சக ஊழியர் திட்டியுள்ளார். இதனையடுத்து, முகம்மது சாகிப் தன்னை அவமானப்படுத்தியதாக தலைமை  அலுவலகத்தில் முறையிட சென்றபோது, அங்கிருந்த செக்யூரிட்டி விரட்டியுள்ளார். இதுகுறித்து  கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த முகமது சாகிப் அங்கிருந்து  கவர்னர் மாளிகை வந்து, நுழைவாயில் முன்பு நின்று, தயாராக கொண்டு வந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். முன்னதாக, கிண்டி போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்டு, இதுபற்றி தெரிவித்தார். விரைந்து வந்த கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார்,   உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற முகம்மது சாகிப்பை தடுத்து நிறுத்தி, காவல்நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், தற்கொலைக்கு முயன்றதாக முகமது சாகிப் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Tags : Caltex ,mansion ,governor ,arrest , Caltex driver,arrested ,trying ,set fire, governor's mansion
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...