×

கர்நாடகா, ஆந்திராவில் ஒரு யூனிட் 6 ஆயிரம் தமிழகத்தில் மலேசிய மணல் 10 ஆயிரத்துக்கு விற்பனை : 54 ஆயிரம் லோடு விற்பனையாகாமல் தேக்கம்

சென்னை: கர்நாடகா, ஆந்திராவில் ஒரு யூனிட் 6 ஆயிரம் விற்பன  செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மலேசிய மணல் 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எண்ணூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 54 ஆயிரம் லோடு மணல் விற்பனை ஆகாமல் உள்ளது. தமிழகத்தில் ஆற்றுமணலுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் மலேசியாவில் இருந்து மணலை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு காட்டுப்பள்ளி, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்து மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மணல் விலை அதிகம் என்பதால் அதை வாங்க போதிய ஆர்வம் காட்டவில்லை. இதனால், எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகவில்லை. குறிப்பாக, 2 மாதத்துக்கு 50 ஆயிரம் லோடு மணல் விற்பனை ஆவதே பெரும் சவாலாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 30 ஆயிரம் லோடு மணல் விற்பனை ஆகவில்லை. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு எண்ணூர் துறைமுகத்துக்கு 54 ஆயிரம் லோடு மணல் வந்துள்ளது. இந்த மணலை வாங்க எதிர்பார்த்த அளவு புக்கிங் வரவில்லை. இதற்கு ஒரு யூனிட் மணல் 10,300க்கு விற்பனை செய்வதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கர்நாடகா மாநிலம் மங்களூரில் வெளிநாட்டில் இருக்கும் இறக்குமதி செய்யப்படும் 1 யூனிட் மணல் 6,600 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே ேபான்று ஆந்திரா மாநிலம் கிருஷ்ணபட்டினத்தில் 1 யூனிட் மணல் 6 ஆயிரம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்து மணல் வாங்கி வருகின்றனர். இதனாலேயே தமிழகத்தில் மலேசிய இறக்குமதி மணல் விற்பனை குறைந்து இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

2 குவாரிகள் திறப்பு


கரூர் மாயனூர், திருச்சி கட்டளை அருகே செயல்பட்டு வந்த 2 குவாரி கடந்த மே மாதம் காலாவதியானது. இந்த குவாரிகளுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், 256 ஹெக்டேரில் செயல்படும் மாயனூர் குவாரியில் மட்டும் 15 லட்சத்து 18 ஆயிரத்து 195 கியூபிக் மீட்டர் மணல் அள்ளவும், 196 ஹெக்டேரில் செயல்படும் திருச்சி கட்டளை குவாரியில் 15 லட்சத்து ஆயிரத்து 024 கியூபிக் மீட்டர் மணல் அள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த குவாரிகள் 3 ஆண்டுகள் மட்டுமே செயல்படுகிறது. தற்ேபாது காவிரி ஆற்றுப்படுகையில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், 2 குவாரிகளை உடனடியாக திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றுப்படுகையில் தண்ணீர் வற்றியவுடன் குவாரி செயல்படும் என்று மணல் குவாரி செயல்பாடு திட்ட இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Tags : units ,Karnataka ,Andhra Pradesh ,Malaysian ,Nadu , Malaysian sand , 10 thousand, Tamil Nadu:
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள்...