×

தீபாவளி சீட்டு நடத்தி 9 லட்சம் மோசடி : தாய், 2 மகன்கள் கைது

துரைப்பாக்கம்: நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணி கற்பக விநாயகர் நகர் 14வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (50). இவர், தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். இவரிடம், அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் (45) உள்பட  150க்கும் மேற்பட்டோர் சீட்டு பணம் கட்டி வந்தனர். இந்த சீட்டு கடந்த 2018ம் ஆண்டு முடிவடைந்தது. அப்போது பாண்டியம்மாள் யாருக்கும் பணம், இனிப்பு உள்பட எந்த பொருட்களும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சீட்டு பணம் ₹9 லட்சத்துடன் பாண்டியம்மாள் மற்றும் அவரது மகன்கள் சதீஷ்குமார் (26), சசிக்குமார் (25) ஆகியோர் திடீரென மாயமாகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீட்டு பணம் கட்டியவர்கள் கருணாகரன் தலைமையில்  கடந்த 2018ம் ஆண்டு நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியம்மாள், சதீஷ்குமார், சசிக்குமார் ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் 3 பேரும் நேற்று தங்கள் வீட்டுக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அவர்கள் 3 பேரையும் கைது  செய்தனர். பின்னர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : sons , Diwali slip, fraud, mother, 2 sons, arrested
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...