×

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகளை வேறு அமர்வில் பட்டியலிட வேதாந்தா குழுமம் கோரிக்கை

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் சிவாஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் பட்டியலிட வேதாந்தா குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தவரும் அரசு தரப்பும் நீதிபதி சிவஞானம் அமர்வுக்கே வழக்கை மாற்றக் கோரிக்கை விடுத்தனர். ஸ்டெர்லைட் வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 30 வரை 28 நாள் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை நடைபெற்றது.

Tags : Vedanta Group ,Sterlite ,session , Sterlite Plant, Vedanta Group
× RELATED ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு...