×

சுபஸ்ரீ உயிரிழப்பு: சட்டவிரோத பேனர் வைத்தது தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது

கிருஷ்ணகிரி: சட்டவிரோத பேனர் வைத்தது தொடர்பாக கடந்த 15 நாட்களாக தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ இறந்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் ஜெயகோபால். சட்டவிரோத பேனர் வைத்தது தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டார். சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பேனர் விழுந்ததால் ஸ்கூட்டரில் சென்ற சுபஸ்ரீ உயிரிழந்தார். சட்ட விரோதமாக சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்ததாக ஜெயகோபால் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். இரு வாரங்களாக தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை கிருஷ்ணகிரியில் போலீஸ் கைது செய்துள்ளது.

கடந்த 12ம் தேதி பேனர் விழுந்து பின்னால் வந்த லாரி ஏறி சுபஸ்ரீ சம்பவ இடத்தில் உயிரிழந்தது மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்தது. இந்த பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த 15 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் ஜெயகோபால் கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்தக்கட்டமாக அவரை சென்னைக்கு அழைத்துவர போலீசார் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : death ,Subhasree ,AIADMK ,Jayakopal ,Subasree , Subasree, Jayakopal, arrested
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...