×

மேலும் 5 நாட்கள் விடுமுறை அறிவித்த அசோக் லேலண்ட்; மாதந்தோறும் 8 நாட்கள் மட்டுமே ஆலைகளை இயக்க நிர்வாகம் முடிவு?

சென்னை: வாகன உற்பத்தி துறை வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் மேலும் 5 நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. பொருளாதார மந்தநிலை சீரடைந்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்த அதே நாளில் அசோக் லேலண்ட் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி வாகன விற்பனை சரிவு காரணமாக சென்னை மற்றும் ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் தொழிற்சாலைகளில் உற்பத்தி வெகுவாக குறைக்கப்படுகிறது. இதனால் சென்னை எண்ணுரில் உள்ள தொழிற்சாலைக்கு நாளை முதல் 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் ஸ்ரீபெரும்புதூர், மற்றும் ஓசூரில் உள்ள ஆலைகளிலும் விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனினும் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை நீங்கலாக முழு மாத ஊதியமும் வழங்கப்படும் என்று அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இனி மாதந்தோறும் 8 நாட்கள் மட்டுமே ஆலைகளை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வேலை நாட்கள் குறித்து ஒவ்வொரு வாரமும் தகவல்கள் அளிக்கப்படும் என்று தொழிற்சங்கத்திடம் நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : holidays ,Ashok Leyland ,holiday ,plant ,recession , fall in vehicle production industry, Ashok Leyland, holiday, recession,
× RELATED இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை...