×

தனியார் மருத்துவமனையில் தீ விபத்து

அண்ணாநகர்: சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை ஏ.சி.யில்  மின் கசிவு ஏற்பட்டதால் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோயம்பேடு, ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பின்பு புகை மண்டலம் வெளியே போவதற்கு வழி இல்லாததால் உள்பக்கம் கண்ணாடியை உடைத்து புகை மண்டலத்தை வெளியேற்றி விட்டனர். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீப்பிடித்த இடத்தில் நோயாளிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Private, hospital ,fire
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...