×

3 பெயர்கள் பரிசீலனை ராணுவத்தின் அடுத்த தலைமை தளபதி யார்?

புதுடெல்லி: ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் ஓய்வுக்கு பிறகு, இப்பதவிக்கு நியமிக்க 3 பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக பிபின் ராவத் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் டிசம்பம் 31ம் தேதியுடன் முடிகிறது. அவர் ஒய்வு பெறுவதால் அவருக்கு பின்னர் புதிய ராணுவ தலைமை தளபதியை அரசு நியமிக்க வேண்டும். 12 லட்சம் வீரர்களை கொண்ட வலுவான படைக்கான தலைமை தளபதிக்கான பதவியை நிரப்புவதற்கான செயல்முறைகளை அரசு தொடங்கியுள்ளது.
துணை ராணுவ தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எம்எம் நார்வானே, வடக்கு ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ெஜனரல் ரன்பீர் சிங், தெற்கு ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ெஜனரல் சதின்தர் குமார் சய்னி ஆகியோரின் பெயர்கள் தலைமை தளபதிக்கான தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

அதே நேரத்தில், முப்படை தளபதிகள் குழு தலைவரை நியமிப்பதற்கான பணியும் பாதுகாப்பு துறை இணை செயலாளர் மூலமாக முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது. இதில், பிரதமர் மோடி தலைமையிலான நியமன கமிட்டி இறுதி முடிவை எடுக்கும். இந்த நியமன கமிட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இடம் பெற்றுள்ளார்.விமான படை தளபதியான பிஎஸ் தனோவா வரும் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், முப்படை தளபதிகள் குழு தலைவர் பொறுப்பை தனோவாவிடம் இருந்து பிபின் ராவத் இன்று பெற உள்ளதாக பாதுகாப்பு துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. தனோவா பதவி ஓய்வு பெறுவதை தொடர்ந்து, விமானப்படை புதிய தளபதியாக ஆர்கேஎஸ் பதவுரியாவை அரசு நியமித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு பிரிவு
ராணுவத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கு வாய்ப்புள்ளதாக ராணுவ கமாண்டர் தெரிவித்துள்ளார். அரியானாவின் ஹிசாரில் உள்ள ராணுவ தளத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில், ஜெய்ப்பூரை சேர்ந்த சப்தா சக்தி பிரிவின் உயர் கமாண்டர் கூறுகையில், ராணுவத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ராணுவத்தில் பயன்படுத்துவதன் மூலமாக ராணுவம் முழுவதுமாக இணைய சேவை ெகாண்டதாக மாறிவிடும். இதன் மூலம், ராணுவத்தின் போர் திறன்களை அதிகரிக்க முடியும், என்றார்.

Tags : Names Review ,Commander in Chief ,Army ,Commander-in-Chief , 3 names, next ,Commander-in-Chief ,Army?
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ