×

பேனர் விழுந்து இளம்பெண் பலியான விவகாரம் பொறியாளர்களிடம் விசாரணை நடத்த தனி அதிகாரி நியமனம்: மாநகராட்சி அதிகாரி தகவல்

சென்னை: பள்ளிக்கரணையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் இளம்பெண் சுபஸ்ரீ பலியான விவகாரத்தில், மாநகராட்சி பொறியாளர்களிம் விசாரணை நடத்த தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 12ம் தேதி இளம்பெண் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதிமுகவை சேர்ந்த ஜெயகோபால் இல்ல நிகழ்ச்சிக்கு சாலை நடுவே வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.இச்சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி, பேனர் விழுந்த விபத்தில் பலியான சுபஸ்ரீ குடும்பத்துக்கு  5 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் சட்ட விரோதமாக பேனர் வைத்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி கடும் கண்டனம் ெதரிவித்தது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ரவி வர்மன் மற்றும் உதவி பொறியாளர் கமல்ராஜ் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இரண்டு பொறியாளர்கள் மீது 9பி பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளை விசாரிக்க தனி அதிகாரிகள்  நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்பிறகு அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும்.  பின்னர் விசாரணை அறிக்கை மாநகராட்சி ஆணையரிடம் அளிக்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பணி இடைநீக்கம், ஊதிய உயர்வு ரத்து, பணி உயர்வு ரத்து மற்றும் அதிகபட்சமாக பணி நீக்கம் வரை செய்ய முடியும், என அதிகாரிகள் தெரிவித்தனர். 


Tags : officer ,engineers ,victim ,Corporation Officer Information Banner , Banner, teenage,Engineers, officer, Municipal
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...