×

‘ஹவ்டி மோடி’ டிவிட்டர் சர்ச்சை நேரு படங்களை தொகுத்து வெளியிட்டார் சசி தரூர்

புதுடெல்லி: நேருவின் அமெரிக்க பயணம் குறித்து டிவிட்டரில் தவறான படம் வெளியிட்ட சசிதரூர், தற்போது அதிகாரப்பூர்வ படங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு, ஷூஸ்டன் நகரில் ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சி மூலம் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், ‘முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி அமெரிக்க சென்றபோது, அவர்களுக்கு எந்த விளம்பரமும் இன்றி இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்,’ என கூறி ஒரு படத்தை வெளியிட்டார். ஆனால், அந்தப் படம் ரஷ்ய பயணத்தில் எடுக்கப்பட்டது. மேலும், இந்திரா காந்தியின் பெயரையும், இந்தியா காந்தி என தவறாக டைப் செய்திருந்தார். இவற்றை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர்கள் பலரை நேரு சந்தித்த அதிகாரப்பூர்வ வீடியோக்களை ‘யூ ட்யூப்’ லிங்க்குடன் சசிதரூர் தொகுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த 1949ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரூமேன், நேருவை வரவேற்றது, கடந்த 1956ல் அப்போதைய அமெரிக்க துணை அதிபர் ரிச்சர்ட் நிக்சன் நேருவையும், இந்திரா காந்தியையும் விமான நிலையத்தில் வரவேற்றது உட்பட பல படங்களை அவர் இணைத்துள்ளார். 


Tags : Shashi Tharoor ,Howdy Modi ,Nehru , Howdy Modi, Twitter, controversy,Sasi Tharoor
× RELATED சசி தரூர் மீது போலீஸ் வழக்கு