×

சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தை 6455 இணையதளங்களில் வெளியிட தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரையிடப்பட உள்ளது. ஏற்கனவே, இந்த படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதை லட்சக்கணக்கானோர் வரவேற்று பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை இணைய தளங்களில் சட்ட விரோதமாக வெளியிடத் தடை விதிக்கக்கோரி சன் டிவி ெநட்வொர்க் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள் மனுவில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி நெட்வொர்க் தமிழகத்தின் நம்பர் ஒன் சேனலாக திகழ்கிறது. எங்கள் நிறுவனம் பல்வேறு பொழுது போக்கு சேனல்களையும் நடத்திவருகிறது. அதுமட்டுமல்லாமல், திரைப்படங்கள் தயாரிப்பிலும் எங்கள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதுவரை எங்கள் நிறுவனம் 25 படங்களை சொந்தமாக தயாரித்துள்ளது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் “நம்ம வீட்டுப் பிள்ளை” திரைப்படத்தை தயாரித்துள்ளது.

இன்று இந்த திரைப்படம் வெளியாகிறது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் முழு காப்புரிமையும் சன் டிவி நெட்வொர்க்கிடம் மட்டும் உள்ளது. இந்த படத்தை சட்டவிரோதமாக இணைய தளங்களிலோ, இன்டர்நெட்டிலோ, கேபிள் டிவிக்களிலோ வெளியிட்டுவிடக்கூடாது. எனவே, நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தை  சட்டவிரோதமாக வெளியிட பார்த்தி ஏர்டெல், ஏர்செல், மும்பையை சேர்ந்த ஹாத்வே இன்டர்நெட் நிறுவனங்கள், சென்னையை சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஜேக் கம்யூனிகேஷன், சேத்துப்பட்டில் உள்ள தமிழக கேபிள் டிவி கம்யூனிகேஷன் உள்ளிட்ட கேபிள் டிவி  நிறுவனங்கள் என 42 நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

மேலும், நாடு முழுவதும் இயங்கிவரும் 6455 இணையதளங்களிலும் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல், சிடி, டிவிடி, பென் டிரைவ் உள்ளிட்ட எந்த சேவை வழியாகவும் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட வேண்டும். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மனுவில் பட்டியலிட்டுள்ள இன்டர்நெட் நிறுவனங்கள், கேபிள் ஆபரேட்டர்கள், இணையதளங்கள் மூலம் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags : Sivakarthikeyan ,Icort ,Namma Guru Pillai ,Sivakarthigeyan ,namma veetu pilla , Sivakarthigeyan, namma veetu pillai, HC
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்