×

அடுத்தடுத்து 2 கோயில்களில் கொள்ளை

பெரம்பூர்: ராயபுரம், பிச்சாண்டி சாலையில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலை அதே பகுதியை சேர்ந்த செல்வா என்பவர் பராமரித்து வருகிறார். இவர், நேற்று காலை கோயிலை திறக்க வந்தபோது, அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த 3 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. ராயபுரம் ஆண்டியப்பன் தெருவில் வைர விநாயகர் கோயில் உள்ளது. அக்கோயிலை அதே பகுதியை சேர்ந்த அருணாசலம் என்பவர் பராமரித்து வருகிறார். இவர், நேற்று காலை கோயிலை திறக்க வந்தபோது, உண்டியலை உடைத்து 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.



Tags : temples ,Robbery , Robbery, 2 temples,succession
× RELATED தொன்மையான 211 திருக்கோயில்களில்...