×

அதிமுக தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை என தகவல்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். விக்கரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு, இந்த கூட்டத்திற்கு பின்பு அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் டெல்லியில் அறிவித்தார்.

தமிழகத்தில், அக்டோபர் 21ல் வாக்குப்பதிவு என்றும்  அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து 2 தொகுதிகளிலும்  தேர்தல்  நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து  தமிழக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ளன. திமுக சார்பில் விருப்பமனுக்கள் பெறப்பட்டு அதற்கான நேர்காணல் நடத்தியுள்ளது. அதில் நாங்குநேரி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டியிடவுள்ளார். இந்த நிலையில், அதிமுக சார்பில் இரண்டு தொகுதிகளுக்கான விருப்ப மனு தாக்கல் கடந்த ஞாற்றுக்கிழமை அன்று தொடங்கி நேற்று 3 மணி வரை நடைபெற்றது. அதில் 90 பேர் விருப்பமனுக்களை தாக்கல் செய்தனர். இவர்களிடம் நேர்காணல் நடைபெற்ற நிலையில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நேற்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதுவரை வெளியாகவில்லை. முதலமைச்சர் பரிசீலனையில் உள்ளது என தகவல்களும் வெளியானது. இந்த நிலையில், இன்று இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு இரண்டு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்குநேரி தொகுதியில் கணேஷ்ராஜா, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன், அதிமுக அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் கானை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்செல்வன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லட்சுமணன், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் ஆர்.வேலு ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : AIADMK ,Chief Executives Advisory Meeting , AIADMK, Chief Executives, Advisory Meeting, Chennai, Vikravandi, Nankuneri, constituency, candidate
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...