×

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைத்துறை டிஐஜி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைத்துறை டிஐஜி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாளையங்கோட்டை மத்திய சிறையில் சுமார் 1100க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் விசாரணை கைதி, ஆயுள் கைதி உள்ளிட்ட பல்வேறு கைதிகள் உள்ளனர். பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையை பொறுத்தவரையில் ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் இந்த அதிரடி சோதனை நடத்தப்படுவது வழக்கம். ஏனெனில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து திடீரென ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதில் செல்போன்கள், சிம்காடுகள், போதை வஸ்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை 6 மணி முதல் சிறைத்துறை டிஐஜி பழனி தலைமையில் தனி மற்றும் திருநெல்வேலி டவுன் உதவிக்கோட்ட துணை கண்காணிப்பாளர் சதீஸ்குமார் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் முடிவுக்கு பின்னரே செல்போன்கள், சிம்காடுகள் உள்ளிட்ட பொருட்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளதா? என்பது தெரியவரும்.


Tags : Nellayi Palayamkottai Central Prison ,Prison DIG , Paddy, Palayamkottai, Central Prison, DIG, police, raid
× RELATED சிறைத்துறையில் ஊழல் நடைபெறுகிறது ; சிறைத்துறை டிஐஜி அறிக்கையால் பரபரப்பு