×

சிங்கப்பூரில் வேலை பார்த்த கணவன் அதிர்ச்சி டிக்டாக்கில் தோழியுடன் நெருக்கம் கண்டிப்பால் புதுப்பெண் எஸ்கேப்

தேவகோட்டை:  சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சானாஊரணியை சேர்ந்தவர் ஆரோக்கிய லியோ. இவரது மனைவி வினிதா (19). கடந்த ஜனவரியில் திருமணம் நடந்தது. திருமணமான 45 நாட்களில் ஆரோக்கிய லியோ  வேலைக்காக சிங்கப்பூர் சென்று விட்டார். அதன் பின்பு வினிதாவுக்கு திருவாரூரை சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் டிக் டாக் வீடியோவில் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது ‘டிக்டாக் வீடியோக்களை பார்த்த ஆரோக்கிய லியோ, தனது மனைவிக்கு போன் போட்டு கண்டித்தார். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து அபியுடன் பழகி வந்தார். இவர்களது பழக்கம் நாளடைவில் நெருக்கமானது.  மேலும், வினிதா, அபியின் படத்தை தனது கையில் ‘டாட்டூ’ வரைந்து கொண்டார். இதை வீடியோகாலில் பார்த்த ஆரோக்கிய லியோ அதிர்ச்சியடைந்தார்.

சிங்கப்பூரில் இருந்து அவசரமாக புறப்பட்டு ஊருக்கு வந்தார். அவரது வீட்டில் அபி அனுப்பிய ஏராளமான பரிசு பொருட்கள் இருந்தன. மேலும் அவர் வேலை பார்த்து அனுப்பிய பணம், திருமணத்தின்போது வினிதா அணிந்திருந்த 20 பவுன்  நகைகளும் மாயமாகியிருந்தன. இதுகுறித்து வினிதாவிடம் கேட்டதற்கு உரிய பதில் அளிக்கவில்லை.இதையடுத்து வினிதாவை தேவகோட்டை அருகே கடம்பாகுடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்து, நடந்த சம்பவங்களை கூறி ஆரோக்கிய லியோ விட்டு சென்றார். வீட்டில் இருந்த வினிதா, கடந்த 19ம் தேதி திடீரென  மாயமானார். அவரது அக்காவின் 25 பவுன் நகைகளையும் காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆரோக்கிய லியோ, திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வினிதா, தோழியுடன் மாயமானாரா என்று விசாரித்து வருகின்றனர்.

Tags : Singapore ,Escape ,Dictac , Husband, shocked, companion, dictac Definitely,escape
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்