×

போதிய நிதி ஒதுக்காததால் பால்குளம், புளியடியில் பாதியில் கிடக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

நாகர்கோவில்: பால்குளம், புளியடியில் அமைக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு போதிய நிதி ஒதுக்காததால் பணிகள் பாதியில் முடங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், மழைகாலங்களில் பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. மழைகாலங்களில் மழை தண்ணீர் தடையின்றி செல்ல வழிவகை செய்யும் வகையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை எந்த வித பாரபட்சமும் இல்லாமல் அகற்ற நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இதே போல் குமரி மாவட்டத்திலும் அகற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் குடிசைமாற்றும் வாரியம் மூலம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளது. இந்த நிலம் பால்குளத்தில் உள்ளது. இதில் சுமார் ரூ.30 கோடி செலவில் 3 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கடந்த 14 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பணிகள் வேகமாக நடந்து வந்தது. இந்த குடியிருப்பில் மொத்தம் 492 வீடுகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு வீடு சுமார் 350 சதுரஅடியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் ஒரு ஹால், ஒரு பெட்ரூம், சமையல் அறை, பாத்ரூம் என்று தனிதனியாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அடுக்குமாடி பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தார்.

ஒப்பந்தகாரருக்கு வழங்கவேண்டிய பணம் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பால்குளத்தில் அமைந்துள்ள குடியிருப்பில் அனைத்து பணிகளும் முடிந்தும், பெயிண்டிங் பணி செய்யப்படாமல் உள்ளது. இதே போல் நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான புளியடியில் கடைநிலை அரசு ஊழியர்களுக்கு குடியிருப்பு வழங்கும் விதத்தில் 3 மாடியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 120 வீடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கும் போதிய பணத்தை ஒப்பந்தகாரருக்கு வழங்கப்படவில்லை. இதனால் பணி பாதியில் உள்ளது. இந்த குடியிருப்பு வருகிற மார்ச் மாதத்திற்குள் முடித்துகொடுக்கவேண்டும்.

குடிசைமாற்று வாரியம் ஒப்பந்தகாரருக்கு வழங்கவேண்டிய பணம் கொடுக்கப்படாதால் வேகமாக நடந்து வந்த குடியிருப்பு பணிகள் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து பணிகளை வேகமாக முடிக்க அறிவுரைவழங்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இந்த குடியிருப்பு வருகிற மார்ச் மாதத்திற்குள் முடித்துகொடுக்கவேண்டும். குடிசைமாற்று வாரியம் ஒப்பந்தகாரருக்கு வழங்கவேண்டிய பணம் கொடுக்கப்படாதால் வேகமாக நடந்து வந்த குடியிருப்பு பணிகள் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது.

Tags : flats ,district administration ,Puliyadiyil , Insufficient funds, milk, pool, apartments
× RELATED காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி...