×

பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வுக்கு கண்டனம்; கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி 5-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

விழுப்புரம்: திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணத்தை கண்டித்து கடந்த 5 நாட்களாக மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்க கூடிய அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெற கூறி கடந்த 5 நாட்களாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 3-வது நாள் போராட்டத்தின் போது போராட்டத்தை முன்னின்று நடத்திய 13 மாணவர்கள் மீது விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்தும், உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதாவது 2 தினங்களுக்கு முன்பு இந்த கல்லூரிக்கு விழா ஒன்றுக்கு வந்த உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனை சந்தித்து மாணவர்கள் மனு அளித்துள்ளனர். மனுவில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவர் வரும் திங்கள் கிழமை அதிகாரிகளிடம் பேசி கல்விக்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார். ஆனால் அவர் கூறியது போல இன்று இதுவரை தேர்வு கட்டணத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் தற்போது திடீரென 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தும், தமிழக அரசை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : aumento ,reducción ,estudiantes , Tarifas de elección universitaria, estudiantes, lucha
× RELATED சாதி சான்றிதழ் கோரி 2ம் நாளாக கோயிலில் மாணவர்கள் போராட்டம்