×
Saravana Stores

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலையை கும்பக்கோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தது சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு

தஞ்சாவூர்: ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை கும்பக்கோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடராஜர் சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சி குலசேகரமுடையார் சிவன் கோவிலில் திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலையை, சிலை திருட்டு தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. நடராஜர் சிலை கடந்த 37ஆண்டுகளுக்கு முன்னதாக கடத்தப்பட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில், தனியார் அருங்காட்சியகத்தில் இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலமாக நடராஜர் சிலை டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ரயில் மூலமாக சிலை செப்டம்பர் 13ம் தேதி சென்னை வந்தடைந்தது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் டெல்லியில் இருந்து சென்னைக்கு சிலையை கொண்டு வந்தனர்.

நடராஜர் சிலைக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்காக சிறிதுநேரம் ரயில்நிலையத்திலேயே சிலை வைக்கப்பட்டது. நடராஜர் சிலைக்கு அங்கேயே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அனைத்து துறைகளின் கூட்டு முயற்சியின் மூலம் சிலை மீட்கப்பட்டுள்ளதாகவும், 2 ஆண்டுகள் இதற்காக சட்டப்போராட்டம் நடத்தப்பட்டதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். இந்த சிலையுடன் சில தூண்களும் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளதாகவும், அதனையும் மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டில் உள்ள சிலைகள் குறித்து முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும் ஆனால் அவரிடம் இருந்து பதில் வரவில்லை எனவும் பொன் மாணிக்கவேல் குற்றம்சாட்டினார். இந்த நிலையில், நடராஜர் சிலை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. நடராஜர் சிலை மட்டும் அல்லாது சிவாகாமி அம்மாள், விநாயகர் சிலை,மூலவர் சிலை உட்பட 15-க்கும் மேற்பட்ட சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : court ,Kumbakonam ,Australia ,Natarajar ,Nadaraj ,Kumbakonam Court of Appeal , Statue of Nataraja, Kumbakonam, Court, handover
× RELATED கும்பகோணம் சார்ங்கபாணிப் பெருமாள்