×

மேற்குவங்கத்தில் ருசிகரம்: மணப்பெண்ணை 'அலாக்காக’ தூக்கி 'மல்லாக்க’ விழுந்த மாப்பிள்ளை... இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் மணப்பெண்ணை அலாக்காக தூக்கி மல்லாக்க விழுந்த மாப்பிள்ளையின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது. திருமணம் ஆண், பெண் இருவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான மறக்க முடியாத ஒன்று திருமணம். சந்தோஷம், மட்டற்ற மகிழ்ச்சி, நண்பர்களின் கலாட்டா என திருமணம் என்றாலே கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இப்போதுள்ள இளஞ்ஜோடிகள் தங்கள் திருமணத்தை மிகவும் வித்தியாசமான முறையில் நடத்துவதையே விரும்புகின்றனர். குறிப்பாக கடலுக்கு அடியில் திருமணம், ஆகாயத்தில் பறந்தபடியே திருமணம் என வித்தியாசங்களை கையாண்டு பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்புகின்றனர்.

அப்படியொரு திருமணம் மேற்குவங்கத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-மேற்குவங்கத்தில் இளஞ்ஜோடிகள் இருவர் இந்து முறைப்படி திருமணம் செய்தனர். பொதுவாக அங்கு திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணை மணமகன் பின்னால் சென்று தூக்கவேண்டும் என்பது ஐதீகம். அதன்படி திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணை மாப்பிள்ளை தூக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கூடி நின்றனர். அப்போது மாப்பிள்ளை மணப்பெண்ணின் பின்னால் சென்று அவரை தூக்க முயற்சித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. திருமணம் மண்டபம் முழுவதும் சிரிப்பொலி எழுந்தது.

இதனால் அவமானம் அடைந்த மாப்பிள்ளை, மணப்பெண்ணை முடிந்த மட்டும் தம்கெட்டி தூக்கினார். ஆனால் அவரால் முடியவில்லை. அப்படியே இருவரும் பின்னால் சாய்ந்தபடி தலைகுப்புற விழுந்தனர். நல்லபடியாக இருவருக்கும் எந்த அடியும் படவில்லை. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது. புதுமண தம்பதிகளின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இந்த வீடியோ டவுன்லோடு செய்து அவர்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் இந்த திருமணத்தை எங்களது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது என்று புதுமண தம்பதிகள் தெரிவித்தனர்.

Tags : Vasikkaram ,groom ,West: Bridegroom 'Alakkal , West Bank, Brides, Groomsmen
× RELATED பாட்னா அருகே நடைபெற்ற திருமணத்தால்...