×

மருமகளை சரமாரியாக தாக்கிய முன்னாள் நீதிபதி: இணையத்தில் வீடியோ வைரல்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் நூட்டி ராமமோகன ராவ். இவர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றி உள்ளார். இவரது மகன் வசிஸ்டாவிற்கு சிந்து ஷர்மா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராமமோகன ராவ், மருமகள் சிந்து ஷர்மாவிடம் வரதட்சணை கேட்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.சிந்து ஷர்மாவை கொடுமைப்படுத்தியது மட்டுமல்லாமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பியுள்ளார். மாமனாரின் கொடுமை தாங்க முடியாத சிந்து ஷர்மா, போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

 இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் வழக்குபதிவு செய்யப்பட்டு, உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராமமோகன ராவ் அவரது மருமகளை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.Tags : judge ,daughter-in-law , Former judge, brutally ,assaulted,law, Video ,viral on the internet
× RELATED இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று...