×

சீன ஓபன் பேட்மின்டன் பி.வி.சிந்து முன்னேற்றம்: சாய்னா அதிர்ச்சி தோல்வி

பெய்ஜிங்: சீன ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார்.முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் லீ ஸுவருயியுடன் நேற்று மோதிய சிந்து 21-18, 21-12 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 34 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

மற்றொரு போட்டியில் தாய்லாந்தின் புசானன் ஆங்பாம்ருங்பானுடன் மோதிய இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் 10-21, 17-21 என்ற நேர் செட்களில் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 44 நிமிடத்துக்கு நீடித்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-19, 21-23, 21-14 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சுப்பான்யு அவிஹிங்சனானை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags : Chinese , Chinese, Open, Badminton,Saina shock ,failure
× RELATED ஜெர்மன் சர்வதேச பாதுகாப்பு...