×

ஓசூர் அருகே ஆட்டை விழுங்க முயன்ற மலைபாம்பு: பொதுமக்கள் பீதி

ஓசூர்: ஓசூர் அருகே குடியிருப்பு பகுதிக்கு அருகே ஆட்டை விழுங்க முயன்ற மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த திப்பாளம் கிராமத்தில், முனிராஜ் என்பவர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்கு பின்னர் ஆடுகளை வீட்டிற்கு அழைத்து வர சென்றபோது, ஒரு ஆடு காணாமல் போனது. தொடர்ந்து, முனிராஜ் அப்பகுதியில் தேடி பார்த்தபோது அங்குள்ள பாறைக்கு அருகே புதர் மறைவில் மலைப்பாம்பு ஒன்று அவரது ஆட்டை விழுங்க முயற்சி செய்து கொண்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த முனிராஜ் அருகிலுள்ள கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த அவர்கள் பாம்பை சுற்றி கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். இதனால், சிறிது நேரம் ஆட்டினை விழுங்காமல் அமைதியாக இருந்த மலைபாம்பு ஆட்டை விட்டு விட்டு அங்கிருந்து சென்றது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இக்கிராம மக்கள் விவசாயம் தவிர ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர். இப்பகுதியில் சுற்றி வரும் மலைப்பாம்புகள் அவ்வப்போது ஆடு, மாடுகளை பிடித்து விழுங்கி வருகிறது. எனவே, அவை குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் முன், மலைப்பாம்புகளை வனப்பகுதியில் விட வேண்டும் என்றனர்.

Tags : Hosur ,panic , Hosur, boa
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு