×

சித்தோடு அருகே இடி தாக்கி பஞ்சாலையில் தீ விபத்து-பஞ்சு பேல்கள், இயந்திரங்கள் கருகியது

பவானி : சித்தோடு அருகே கழிவு பஞ்சாலையில் இடி தாக்கியதில் பஞ்சு பேல்கள், இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமானது.ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள பச்சப்பாளி மேடு, வசந்தம் பாரடைஸ் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் பெருமாள் (43). இவர், அப்பகுதியில் கழிவு பஞ்சு துணியை பஞ்சாக அரைத்தும், அதனை மூலப் பொருளாகக் கொண்டு மற்றும் நூற்பாலை நடத்தி வருகிறார். இங்கு, வட மாநில தொழிலாளர்கள் மற்றும் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 40 பேர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.  இங்கு, தொழிலாளர்கள் பணியிலிருந்தபோது, சித்தோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று மாலை பலத்த இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. அப்போது, திடீரென நூற்பாலையில் இடி தாக்கியதில் கழிவு பஞ்சுகளில் தீப்பிடித்தது. இதனை கண்ட தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால், தீ காற்றின் வேகத்தில் மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால், தொழிலாளர்கள் உடமைகளுடன் வெளியேறி தப்பிச் சென்றனர். இது குறித்து, தகவல் அறிந்த பவானி தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கட்டுக்குக்குள் வராததால், ஈரோடு, பெருந்துறை பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.தீயின் வெப்பத்தால், மேற்கூறைகள் வெடித்துச் சிதறின. இதனால், நூற்பாலையின் பக்கவாட்டுச் சுவர்களை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. ஆயினும், கழிவு பஞ்சில் பிடித்த தீயை அணைக்க முடியவில்லை.   இதனைத் தொடர்ந்து, டேங்கர் லாரிகள், டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, ராட்சத மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் தீ விபத்தில் சேதமான பஞ்சு பேல்கள், இயந்திரங்களின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து, சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post சித்தோடு அருகே இடி தாக்கி பஞ்சாலையில் தீ விபத்து-பஞ்சு பேல்கள், இயந்திரங்கள் கருகியது appeared first on Dinakaran.

Tags : Panjalai ,Siddhod ,Bhavani ,Erode District ,Siddha ,Dinakaran ,
× RELATED பவானி மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி