×

பனி பொழிவால் சாகுபடி பாதிப்பு திருவிழா தடையால் முல்லைப்பூ விலை வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை

வேதாரண்யம் : நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், நெய்விளக்கு, பஞ்சநதிகுளம் உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் 1000ஏக்கரில் முல்லை பூ சாகுபடி செய்யப்படுகிறது.ஆண்டுதோறும் மார்ச் மாதம் துவங்கி அக்டோபர் வரை முல்லை பூசீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லை பூ பட்டுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.தற்போது வேதாரண்யம் பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் பூச்செடிகள் இலைகள் உதிர்ந்து பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சீசன் காலத்தில் கிலோ ரூ.50 முதல் 100 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி வரை கிலோ ரூ.1000 வரை விற்பனை ஆகிறது.தற்போது கிலோ ரூ.700 முதல் 1000 வரை விற்பனையானது. பனி பொழிவால் முல்லைபூ அதிகம் விளையாததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது, கொரோனா பரவல் காரணமாக திருவிழாக்கள் நிறுத்தப்பட்டது. வழக்கமாக தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் பூக்கள் அதிக விலைக்கு விற்கும். ஆனால் தற்போது திருவிழாக்களுக்கு அரசு தடை விதித்ததால் பூக்களுக்கு விலையில்லை.தற்போது ஒரு கிலோ முல்லைப்பூ ரூ.300 முதல் 400 வரை விற்பனையாகிறது வழக்கமாக இந்த திருவிழா காலங்களில் ரூ.1000 முதல் 2000 வரை விற்பனையாகும். பூ விளைச்சல் பாதிப்பு ஒரு பக்கம், விலை இல்லாமல் போனது மறுபக்கமும் விவசாயிகளுக்கு மிகுந்த வேதனை அளித்துள்ளது. இதனால் இந்த முல்லைபூ சாகுபடியை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கபடுகின்றனர்.எனவே முல்லைபூ விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவியும், நிவாரணம் வழங்க வேண்டும் என வணிகர் சங்க தலைவருமான திருமலை செந்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பனி பொழிவால் சாகுபடி பாதிப்பு திருவிழா தடையால் முல்லைப்பூ விலை வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Nagai District Vedaranyam ,Karupampulam ,Ayakkaranpulam ,Marudur ,Neyvilakum ,Panchanadikulam ,
× RELATED ஆயக்காரன்புலம் கலிதீர்த்தஐயனார்...