‘சூப்பர் எமர்ஜென்சி’ மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: நாடு சூப்பர் எமர்ஜென்சி கால கட்டத்தில் உள்ளது. அரசியலமைப்பு  அளிக்கும் சுதந்திரத்தையும், உரிமையையும் மக்கள் பாதுகாக்க வேண்டும்,’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.உலகம் முழுவதும் நேற்று, சர்வதேச ஜனநாயக தினம் அனுசரிக்கப்பட்டது.இதை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தற்போது நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை நோக்கிச் செல்கிறது.சர்வதேச ஜனநாயக தினத்தன்று நமது அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்த சுதந்திரத்தையும், உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.


Tags : Super Emergency ,Mamta , Super Emergency Model, Mamta, Charge
× RELATED ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்...