திருப்பூர் பெருமாள் கோயில் அருகே பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணி: மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்

திருப்பூர்: திருப்பூர் பெருமாள் கோவில் அருகே பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகரின் பிரதான பகுதியில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள பாதாள சாக்கடையில் திருப்பூரின் மைய பகுதியில் உள்ள அனைத்து சாக்கடைகளும் செல்கிறது. அடிக்கடி இந்த பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீரானது ரோட்டில் பாய்ந்தோடும். இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும், அந்த பகுதியில் கடைகள் நடத்துபவர்களுக்கும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மனித கழிவுகள் வெளியேறியது. இது குறித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த பகுதி பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி இந்த பகுதியில் ஏற்படும் பாதாள சாக்கடை அடைப்பை நிரந்தரமாக சரிசெய்ய வேண்டுமென அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Removal ,sewer ,temple ,Tirupur Perumal ,Municipal , Tirupur Perumal temple, sewer, mission
× RELATED சாலையில் வாகன ஒட்டிகளை பதம்...