×

2020 - 21ம் நிதியாண்டின் துவக்கத்தில் மன்னார்குடி ரயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்து துவக்கம் ?...பணிகள் மும்முரம்

மன்னார்குடி: மன்னார்குடி ரயில் நிலையத்தில் 2020 - 21 ம் நிதியாண்டின் துவக்கத்தில் சரக்கு போக்குவரத்து துவக்கபட உள்ளதால் அக்டோபர் 31 ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டுமென தெற்கு ரயில்வே பொது மேலாளர் உத்தர விட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரு கிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி வழியாக பட்டுக்கோட்டை வரை 55 கிமீ தூரத்திற்கு புதிய அகல ரயில் பாதை அமைக்க அப்போதைய ரயில்வே நிலைக்குழு தலைவராக இருந்த திமுக எம்பி டிஆர் பாலு எடுத்த தொடர் முயற்சியால் ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 2010 ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் இந்த திட்டத்தை அறிவித்தார்.
அதில் ஒரு பகுதியாக நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி வரையிலான 14 கிமீ தூரத்திற்கு ரூ.79 கோடி செலவில் புதிய அகல ரயில் பாதை அமைக்கபட்டு அதில் கடந்த 2011 செப்டம்பர் மாதம் முதல் பயணிகள் ரயில் இயக்கப் பட்டு வருகிறது. மீதமுள்ள மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரை யிலான 41 கிமீ தூரத்திற்கு புதிய அகல ரயில் பாதை அமைக்க 2012 ம் ஆண் டில் விரிவான சர்வே மேற் கொள்ளப் பட்டது.

அதில் நசுவாணி ஆறு மற்றும் வடக்காடு வாய்கால் என இரண்டு இடங் களில் பெரிய ரயில்வே பாலங்கள் கட்ட ரூ.7 கோடியே 27 லட்சத்து 57000 மதிப்பில் அக்டோபர் 2012 இல் ஏலம் விடப்பட்டது. அதேபோல கண்ணனூர் ஆற்றுப் பாலம் கட்ட ரூ. 8 கோடியே 70 லட்சத்து 46000 மதிப்பில் மார்ச் 2013 ல் கட்ட ஏலம் விடப்பட்டது. ஏறத்தாழ அதே மதிப்பில் பாமணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட அதே ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இதற்கான முதல் கட்ட நிதி, அகலபாதை திட்ட நிதியில் இருந்து நிதியாண்டு 2013-14 ல் ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு இந்த பாலங்கள் கட்டுமானத்திற்கு திருவாரூர் - காரைக்குடி அகலப்பாதை திட்ட நிதியில் இருந்து நிதி பிரித்து வழங்க பட வேண்டும். ஆனால் வழங்கப் படவில்லை. இதனால் மன்னார் குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரையிலான புதிய ரயில் பாதை அமைக் கும் திட்டம் மற்ற பணிகள் நடைபெறாமல் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.இந்நிலையில், மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள பாமணி கிராமத்தில் மத்திய உணவு மற்றும் பொது வழங்கல் துறைக்கு சொந்த மாக சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டன் சரக்குகள் சேமிக்கும் வசதி கொண்ட மத்திய சேமிப்பு கிடங்கு உள்ளது. இக்கிடங்கில் தற்போது 10 ஆயிரம் மெட் ரிக் டன் சரக்குகள் மட்டுமே சேமிப்பில் உள்ளது. பெரும்பாலான குடோன்கள் காலியாகவே உள்ளன.

ஆனால், மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பல்லாயிரக்கணக்கான டன் நெல் மூட் டைகள் மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலத்திற்கு லாரிகள் மூலம் சாலை மார்கமாக எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து கூட்ஸ் ரயில்கள் மூலம் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் அரிசி மற்றும் உரமூட்டைகள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளும் மன்னார்குடியில் ரயில் நிலையம் இருந்தும் சாலை மார்க்கமாகவே வருகிறது. இதனால் பல்வேறு பிரச்சனைகளும், ரயில்வே நிர்வாகத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாய் இது நாள் வரை கிடைக்காமல் இருந்து வருகிறது. மன்னார்குடியில் ரயில் போக்குவரத்து தொடங்கி 9 வருடங்கள் ஆகியும் அதில் சரக்கு ரயில்கள் இயக்கப்படும் வசதிகள் இல்லாமல் இருந்த சூழலை கருத்தில் கொண்டு இந்திய உணவு கழகம் மற்றும் பாமணி மத்திய சேமிப்பு கிடங்கு ஆகிய துறைகளின் சார்பில் மன்னார்குடி ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அமைத்து சரக்கு போக்குவரத்து துவக்க வேண்டுமென ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதின.மேலும் மன்னார்குடி தொகுதி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜாவிடமும் இது குறித்து பொது மக்கள், வர்த்தகர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தனர். அதற்காக பல்வேறு முன் முயற்சிகளை திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தொடர்ந்து எடுத்து வந்தார். அதன் பலனாக மன்னார்குடியில் ரயில் நிலையத்தில் சரக்கு போக்கு வரத்தை துவக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.

அதற்கான திட்டப் பணிகளான தற்போதைய இருப்பு பாதை ஒட்டி நரிக் குறவர் காலனி வழியாக செல்லும் தற்போதைய கான்கிரீட் சாலை மன்னார் குடி திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள ஐவர் சமாதி என்கிற இடம் வரை யிலும் மேலும் மன்னார்குடி ரயில் நிலையத்தில் ஏற்கனவே உள்ள 3 ரூட்டு களுக்கான இருப்பு பாதைகளும் ஐவர் சமாதி வரையிலும் இத்திட்டத்திற் காக நீட்டிக்கப்பட்டு வருகிறது.பணிகளை வரும் அக்டோபர் 31 ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென தெற்கு ரயில்வே பொது மேலாளர் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே வரும் 2020 - 21 நிதியாண்டு முதல் மன்னார்குடி ரயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்து துவங்கும் என தெரிகிறது. இதனால் மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு ஆண்டுக்கு கூடுதலாக சுமார் 25 கோடி வரை வருவாய் கிட்டும் என தெரிகிறது.

Tags : Mannargudi Railway Station , Mannargudi, Freight Transport, Mummuram
× RELATED இந்திய அரசியலமைப்பு தினம்...