×

மதுரையில் ஜாமீனில் வந்து விருந்து கைதியுடன் மது குடித்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்: 2 சிறைக்காவலர்கள் மீதும் நடவடிக்கை

மதுரை: மதுரை மத்திய சிறையில் 1,800க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இங்கு டிஐஜி பழனி, கண்காணிப்பாளர் ஊர்மிளா, ஜெயிலர்கள் மற்றும் உதவி ஜெயிலர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிக காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். சிறைக்குள் கஞ்சா மற்றும் செல்போன் புழக்கம் இருப்பதாக அவ்வப்போது புகார்கள் வருவதை ஒட்டி, போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துகிருஷ்ணன் என்ற கைதி ஜாமீனில் விடுதலை ஆனார். இதை கொண்டாட மதுரையில் உள்ள பாரில் மது விருந்துக்கு முத்துகிருஷ்ணன் ஏற்பாடு செய்துள்ளார். இவரது விருந்துக்கு மதுரை சிறைச்சாலையின் உதவி ஜெயிலர் முனியாண்டி, முதுநிலை காவலர்கள் மணி, முத்து ஆகிய 3 பேரும் சென்றுள்ளனர். இவர்கள் முத்துகிருஷ்ணனுடன் சேர்ந்து மது குடித்து, கும்மாளமிடுவதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதன்பேரில் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உத்தரவில், அந்த பாரில் சிறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது ஜாமீனில் விடுதலையான முத்துகிருஷ்ணனுடன் அமர்ந்து 3 பேரும் மது குடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து உதவி ஜெயிலர் உள்ளிட்ட 3 பேரையும் கண்காணிப்பாளர் ஊர்மிளா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் மதுரை சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Jailor ,Madurai , Madurai, Prisoner, Madhu, The Assistant Jailer, Suspenda, 2 Prisoners
× RELATED ‘ஜெய்லர் 2’ உண்டா? தனது பிறந்தநாளில் பதிலளித்த ஜெய்லர் மகன்!