×

தீபாவளி முதல் மீனாட்சி கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பால் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி கோயில் போல, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் லட்டு வழங்க, கோயில் நிர்வாகம், இந்து அறநிலையத்துறை கமிஷனரின் ஒப்புதல் கேட்டிருந்தது. அவர்கள் அனுமதியுடன் லட்டு வழங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி வரும் தீபாவளி (அக். 27) முதல் பக்தர்கள் அனைவருக்கும், அதிகாலை நடை திறந்ததில் இருந்து இரவு நடை சாத்தும் வரை இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார்.


Tags : devotees ,Diwali First Meenakshi Temple , Diwali, Meenakshi Temple, Devotees, Free Ladu
× RELATED தீபாவளிக்கு விஜய், சூர்யா படம் ரிலீஸ்?