×

தந்தையை கொன்ற மகன் கைது

தாம்பரம்: தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, தேவநேசன் நகர், 2வது பிரதான சாலையை சேர்ந்தவர் ஆரோன் (45). இவர், மாநகராட்சி குப்பை வாகன டிரைவராக வேலை பார்த்து கடந்த சில காலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து  வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் குடித்து விட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஏற்பட்ட தகராறில்  ஆரோனை அவரது மகன் ஆலன் தாக்கியதில் தலையில் காயமடைந்தார். பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று மதியம் மீண்டும்  உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தந்தையை கொலை செய்த ஆலனை கைது செய்தனர்.


Tags : Father, murder, son arrested
× RELATED ஓட்டப்பிடாரம் அருகே பயங்கரம்:...